GTF president Dr Rev S J Emmanuel - New Year message
Monday, December 29, 2014
இப் புத்தாணடு இறைவன் ஆசீருடன் நல்லாண்டாக மலர்வதாக!
உங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும்
உண்மையான சமாதானம் வளர்வதாக.
இருள் சூழ்ந்த எம் தாயகத்தில் மீளவும் ஒளி பிறக்கவும்
எமது மண்ணும் மக்களும் மறு வாழ்வு பெறவும்
புலம் பெயர்ந்த நாம் தொடர்ந்து எமது பங்களிப்பை செய்வோமாக.
புத்தாணடில் நடக்கவிருக்கும் தேர்தல்
எல்லா மக்களையும் சமமாக மதிக்கும் தேர்தலல்ல.
பெரும்பான்மை சிங்கள புத்த பேரினவாதிகளின் போட்டியாகிறது.
தமிழரும் தமிழ் பேசும் இஸ்லாமியரும் ஓரங்கட்டப் பட்டு
அதிகாரமற்ற அனாதைகளாக கணிக்கப் படுகின்றோம்;.
இருந்தும் நாட்டின் பிரசைகளுக்குரிய வாக்குரிமை எம்மவர்க்குமுண்டு.
உரிமையை வீணாக்காது, விரக்தியடையாது,
ஏதோ ஒரு வகையில் நல்லவராக தோன்றுபவர்க்கு
தமிழ் மக்களின் மனச்சாட்சி வாக்களிப்பதாக.
ஓரங்கட்டப் பட்டாலும் எவர்தான் கூத்தாடினாலும்
ஆட்சி பீடத்தில் எவர்தான் அமர்ந்தாலும்
எமது மண்ணிற்கும் மக்களுக்குமான விடுதலைப் போராட்டம்
முழு மூச்சுடனும் வீச்சுடனும் தொடரவேண்டும்.
2015 மார்சசில் செனிவாவில் வெளிவரும்
சர்வதேச விசாரணையின் அறிக்கை
எமது நீண்ட போராட்டத்திலும் இன்றைய சர்வதேச போராட்டத்திலும் ஒரு மிக முக்கிய இன்றியமையாத படியே, அது முடிவல்ல!
புத்தாண்டில் ஆட்சி மாற்றத்துடனும,; ஏமாற்று வாக்குறுதிகளுடனும், சர்வதேச களைப்புடனும,; எமது போராட்டத்திற்கு
பல சவால்கள் நிற்சயமாகத் தோன்றும் சாத்தியமுண்டு.
இச் சவால்களுக்கு முகங்கெர்டுக்க வேண்டிய முக்கியஸ்தர்கள்
புலம் பெயர் தமிழர்களும் அவர்களின் அமைப்புகளுமே.
ஒரே திசையில் பொறுப்புணர்ச்சியுடனும், புரிந்துணர்வுடனும்
எல்லோரும் செயல்படுவோமாக.
ஆகையினால் ஆரியரென்று ஆர்தான் கூத்தாடினாலும்
நாம் காரியத்தில் கண்ணாயிருப்போம்!!!
இறை ஆசீர் உங்கள் எல்லோருடனும் இருப்பதாக
பணியாளன் எஸ். யே. இம்மானுவேல்
யேர்மனி, 28.12.2014